ஸ்ரீ லங்கன் எயார்லைன்சில் இருந்து விமானிகள் வெளியேற்றம்; நெருக்கடியில் விமான சேவைகள்
ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் 60 விமானிகள் கடந்த ஒருவருடகாலப்பகுதியில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் புதிதாக விமானிகளை பணிக்கு அமர்த்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பிரதமநிறைவேற்று அதிகாரிரிச்சர்ட் நட்டால் உறுதிசெய்துள்ளார்.
ஏற்கனவே நட்டத்தில் இயங்கிய ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் இலங்கை கடந்த வருடம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் விமானிகள் பலர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கையின் அந்நியசெலவாணி நெருக்கடியும் உயர்வரிகளை விதிப்பதற்கான அரசாங்கத்தின்திட்டமும் விமானிகள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு விமானிகள் வெளியேறியமை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தனக்கான விமானிகளை பேணுவதில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடம் 30 விமானிகள் தேவை அடுத்த வருடம் நடுப்பகுதிக்குள் 50 விமானிகள் தேவை என ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பிரதமநிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிஸ்டவசமாக தென்கிழக்கு ஆசியாவிலும்வடகிழக்கு ஐரோப்பாவிலும் திறமையான விமானிகள் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.