மின்சார கம்பியில் சிக்கிய விமானி
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று (21) காலை வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.
விபத்து நடந்த போது, விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர்.
விமான விபத்து
ஆனால், ஒரு விமானி தரையிறங்கும் போது சிறிய காயங்களுக்கு உள்ளானார். பிரதான பயிற்சி ஆலோசகர் தரையிறங்கும் போது மின்சார கம்பியில் சிக்கியதால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பின்னர், பிரதேசவாசிகள் இணைந்து இரண்டு விமான அதிகாரிகளையும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
எனினும், விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
பிரதான பயிற்சி ஆலோசகர் மற்றும் ஒரு பயிற்சி விமானியுடன் புறப்பட்ட இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K-8 வகையைச் சேர்ந்த உயர்நிலை பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் தாக்குதல் விமானமே காலை 7:55 மணியளவில் வாரியபொல பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.