பிள்ளையான், டக்ளஸ் கைது ; புலம்பெயர் தமிழ் அமைப்பை திருப்திபடுத்தும் அனுர அரசாங்கம்!
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

போலியான குற்றச்சாட்டுக்கள்
2026 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள்.
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
நல்லதை செய்யாமல் இந்த ஆண்டு எவ்வாறு நல்லதாக அமையும்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு தமிழர்களை இவ்வாறு கைது செய்து சிங்கள இனம் நன்றி மறந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றார்.