கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளாராக பிள்ளையான்?
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) களமிறங்கலாம் என அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் துறந்து மொட்டு கூட்டணியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்படலாமென தெரியவருகிறது.
இதுதொடர்பில் பூபாலப்பிள்ளை பிரசாந்த தெரிவித்தது,
கிழக்கு மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துமாயின் கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு பிள்ளையான் ஒத்திசைவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவநேதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. எனவே, பிள்ளையான் (Pillayan ) பதவி துறந்தாலும் அவரின் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றம் செல்லக்கூடும்.
மாகாண சபைத் தேர்தல் 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.