தாலியுடன் பதிவிட்ட புகைப்படம்; நெட்டிசன்கள் கேள்விக்கு அதிரடி பதில் அளித்த வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா. இவர் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரின் முதல் திரைப்படத்திலேயே நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.
எனினும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து சில நாட்களில் இருவரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து வனிதாவை பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் உடன் வனிதா மாலை மாற்றிக் கொள்வது போல் ஒரு புகைப்படம் வெளிவந்ததும் அது தொடர்பிலும் பரவலாக பேசப்பட்டார் நடிகை வனிதா. இந்த நிலையில் தற்போது புதிதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் வனிதா.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமாக அவரை கலாய்த்து வருகின்றனர். அத்துடன் இது உங்கள் நான்காவது திருமணமா? என கேலி செய்த நிலையில், ‘நான் 4 திருமணம் செய்து கொள்வேன் அல்லது 400 திருமணம் செய்து கொள்வேன், உங்களுக்கு என்ன?’ என வனிதா சூடாக பதிலடி கொடுத்துள்ளார்.