யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்...வன்முறை கும்பல்கள் அட்டகாசம்!
யாழ். ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினமும் 2 வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கற்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக வன்முறை கும்பல்கள் அட்டகாசம் செய்யும் நிலையில் பொலிஸார் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.