தமிழக சட்டமன்ற தேர்தல் ; நடிகர் அஜித் தொடர்பில் பரவும் வதந்தி
தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் இடம்பெற்றுவரும் நிலையில் மாற்றம் வேண்டும் என நடிகர் அஜித்குமார் கூறியதாக வதந்திகள் பரவியுள்ள நிலையில், அவர் அப்படி எதுவும் கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சில ஊடகங்களில் நடிகர் அஜித் குமார் மாற்றம் வேண்டும் என கூறியதாக தகவல் வெளியான நிலையில் அது வதந்தி என கூறப்படுகின்றது.

மேலாளர் சுரேஷ் சந்திரா தெளிவுபடுத்தியுள்ளார்
மாற்றம் வேண்டும்" அல்லது "மாற்றம் தேவையில்லை" என்று நடிகர் அஜித் குமார் கூறியதாக பரவிய செய்திகள் தவறானவை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவின் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
திருவான்மியூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கு வருகை தந்த நடிகர் அஜித் குமார், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில், முதல் நபராக அவர் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.