பட வாய்ப்பு தருவதாக கூறி தவறான பாதைக்கு அழைத்த நபர்: கடுமையாக விமர்சித்த பிக்பாஸ் பிரபலம்!
பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்பவர்களை பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர்தான் அனிதா சம்பத். இவர் மற்றொரு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரசிகர்களிடம் ஆதரவை பெற்றார்.
இதற்கிடையே சமீபத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, இளம்பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு ஒருவர் அழைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வந்த அந்த செய்தியை, அனிதா சம்பத்திற்கு அந்தப் பெண் பகிர்ந்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனிதா சம்பத், ”தோழி இந்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பினார். தயவு செய்து இந்த மாதிரி ஆட்களை நம்பாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.