விநோதமான முறையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திய நபர்!
வீதியில் விநோதமான முறையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பொதுமக்களை மிரட்டிய நபர் ஒருவரால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இளைஞர் ஒருவர் அபாயகரமான முறையில் விநோதமான ஹெல்மெட் ஒன்றையும் அணிந்தபடி மோட்டார் சைக்கிளை சுற்றித்திரிந்துள்ளார்.
ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஹெல்மெட்டானது பார்ப்பதற்கு முயல் உருவத்துடன் வித்தியாசமாக இருந்துள்ளது.
இதனைக் கண்டதும் அப்பகுதி மக்களும், சுற்றுலாப்பயணிகளும் அச்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு அச்ச்சுறுத்தலுடன் செயற்பட்ட இளைஞரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் முறையிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் குற்றாலம் பொலிஸார் அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்தனர்.
தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுஜித் (23-11-2023) என்ற இளைஞனே இந்த செயலை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ரூ.10,000 அபராதம் விதித்தனர்.
மேலும் அவரின் பைக்கையும் பொலிஸார் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.