இலங்கையில் பயங்கர சம்பவம்: கொடூரமாக கொல்லப்பட்ட நபர்!
மில்லனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (02-10-2023) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் மில்லனிய கிம்மன்துடாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையை செய்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பணத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கத்தியால் தாக்கப்பட்ட நபர் பொலிஸாரை நோக்கி ஓடியதாகவும், காயமடைந்த அவரை பொலிஸார் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.