ஹொரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கொழும்பு ஹொரணை - கிரேஸ்லேன்ட் தோட்டத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் டுபாய் செல்லவிருந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் செல்லவிருந்த போது கைது
சந்தேக நபர் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் இன்று (2024.05.05) பிற்பகல் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேகநபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் ஏற்கனவே விதித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஹொரணை - கிரேஸ்லேண்ட் பகுதியில் வாகனத்திற்குள் நுழைந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, காயமடைந்தவர் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார் இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.