பொலிஸ் விசாரணையில் திடீரென உயிரிழந்த நபர்!
களுத்துறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறு முறைப்பாடுகள் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
சம்பவத்தில் களுத்துறை தெற்கு, சேனவிரத்ன ப்ளேஸைச் சேர்ந்த கஜநாயக்க முதலிகே நாலக துஷார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறு முறைப்பாடுகள் பிரிவில் ஒரு முறைப்பாடு தொடர்பில் குறித்த நபர் அழைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் முன்பே காணி தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தாக கூறப்படுகின்றது.
அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையிலேயே அவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.