பிறந்தநாள் அன்றே இடம்பெற்ற அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!
கொழும்பு - கும்புக்கஹதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் பண்டாரகம ரைகம, பிரதேசத்தை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் உயிரிழந்தவரின் பிறந்த நாளான கடந்த 02-12-2024 திகதி இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஸ்ரீ ஜயவர்தனபுர, நாடாளுமன்ற வீதியில், கும்புக்கஹதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மதிலில் இருந்த பழைய இரும்பு வேலியை உயிரிழந்த நபரும் அவரது மகனும் அகற்றியுள்ளனர்.
பின்னர் புதிய வேலியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் மகன் கடையொன்றிற்கு சென்றிருந்த நிலையில் மதிலின் மீதமிருந்த பகுதியை தந்தை அகற்றும் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, சுவர் இடிந்து விழுந்ததுடன், குறித்த நபர் அதன் அடியில் சிக்கியதாகவும் இதனால் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.