உயரமான தென்னைமரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்! வெளியான காரணம்
பசியைத் தாங்க முடியவில்லை என்று கூறி நபர் ஒருவர் உயரமான தென்னைமரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (12) செவ்வாய்க்கிழமை களுத்துறை இடம்பெற்றுள்ளது. அப்பகுதியை சேர்ந்த நிமல் என்பவர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மரத்திலிருந்து இறங்குமாறும் தெரிவித்தனர்.
பின்னர் மரத்திலிருந்து இறங்கிய நபரிடம் பொருட்கள் அடங்கிய பொதிகளை கொடுத்து பிரச்சினையை பொலிஸார் தீர்த்ததாக குறிப்பிடப்படுகின்றது.
மரத்திலிருந்து குறித்த நபர் கீழே இறங்கிய போது, மற்ற அனைவரிடம் சாமான்கள் இருந்ததால் தனக்கு எந்த சாமானும் கிடைக்கவில்லை என்றும் அவர் மரத்தில் இருந்து குதிக்க நினைத்தே, மரத்தில் ஏறியதாகவும் தெரிவித்தார்.