லொகு பெட்டியுடன் தொடர்புடைய நபர் கைது ; வங்கி கணக்குகளில் ரூ. 330 மில்லியனுக்கும் அதிகமான பணம்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொகு பெட்டி என்ற குற்றவாளியின் நிதி கொடுக்கல் வாங்கலை கையாண்ட கபுவா என்ற ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் கந்தர பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் வலையமைப்பு மோசடி விசாரணைப் பிரிவினால் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
330 மில்லியனுக்கும் அதிகமான பணம்
குறித்த சந்தேக நபரின் கணக்குகளில் ரூ. 330 மில்லியனுக்கும் அதிகமான பணம் புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
விசாரணைகளில் அவருக்கு கிளப் வசந்த கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொகு பெட்டியுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
லொகு பெட்டியின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 7 நாள் தடுப்பு உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.