பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதி
வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழகங்களை பல கட்டங்களின் கீழ் மீண்டும் நவம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்தத் திகதியில் திறப்பது என்பது குறித்த அதிகாரம் துணை வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி முதல் கட்டத்தின் கீழ், இரண்டு வாரங்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை முதல் கட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.