ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையிலும் கொழும்பில் மக்கள் நடமாட்டம்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் கொழும்பு வாழ் மக்கள் நடமாடுவதை அவதானிக்க முடிவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று கொழும்பு ஐந்துலாம்புச் சந்தி பீப்பிள்ஸ் பார்க் முன்பாகவுள்ள காய்கறிச் சந்தைக்கு அருகில் வியாபாரிகள் காய்கறி, பழ விற்பனையில் ஈடுபடுவதையும் மக்கள் அவற்றைக் கொள்வனவு செய்வதனையும் அவதானிக்க முடிந்தது.
அதேவேளை கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் இன்று வழக்கம் போல் மக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதையும், வருமானத்துக்காக இருவர் நண்டு,கீரை விற்பனையில் ஈடுபட்டதயும் காணமுடிந்தது.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், நாளாந்தம் கூலிவேலை செய்யும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





