நகைச்சுவை உணர்வு மிக்க பிரித்தானிய மகாராணியின் நினைவுகளை மீட்டும் மக்கள்!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) 70 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர். அதிகாரபூர்வ சந்திப்புகளில் மகாராணி அதிகம் தென்படுபவர். மக்களின் மனங்களில் நின்ற பெண்மணியாக அவர் உள்ளார்.
இந்நிலையில் உடல் நலகுறைவால் அவர் (Queen Elizabeth II) நேற்று முன் தினம் மரணமானார்.
இந்நிலையில் பல்லாண்டுகளாக ராணியில் மெய்ப்பாதுகலராக இருப்பவர் டிக் (Dick) ஆவார், ஒருமுறை, பால்மோரல் (Balmoral) அரண்மனைக்கு அருகில் உள்ள குன்றுகள் கொண்ட பகுதியில் அரசியார் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு அமெரிக்கப் பயணிகள் அங்கு வந்தனர்.
அவர்களுக்கு அரசியை (Queen Elizabeth II) அடையாளம் தெரியவில்லை. அதில் ஒருவர் அரசியாரைப் (Queen Elizabeth II) பார்த்து அவர் எங்கு வசிக்கிறார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அரசியார் லண்டன் என்று பதிலளித்தார்.
80 ஆண்டுகளாக அவ்வப்போது ஸ்காட்லந்தில் இருக்கும் உல்லாசப் பகுதிக்கு வந்துபோவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அருகில் அரண்மனை இருப்பதை அறிந்த பயணி, அரசியாரிடம் (Queen Elizabeth II) நீங்கள் பிரிட்டன் அரசியைச் சந்தித்திருக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு உடனடியாகப் பதிலளித்த அரசியார் (Queen Elizabeth II) , நான் சந்தித்தில்லை. ஆனால் இதோ நிற்கிறாரே டிக் (Dick), இவர் அரசியாரை அன்றாடம் சந்திப்பவர் என்று கூறியிருக்கிறார்.
டிக் பல்லாண்டுகளாக அரசியின் (Queen Elizabeth II) பாதுகாவலராக இருப்பவர். உடனே பயணி டிக்கைப் பார்த்து "அரசியார் எப்படிப்பட்டவர்?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு டிக் வேடிக்கையாக, "அவ்வப்போது கோபப்படக்கூடியவர்.
ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர்" என்று சொல்லியிருக்கிறார். உடனே பயணி மகிழ்ச்சியுடன் கேமராவை அரசியாரிடம் கொடுத்து, "டிக்குடன் படம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு படம் எடுக்க முடியுமா?" என்று கேட்டிருக்கிறார். அரசியாரும் (Queen Elizabeth II) படம் எடுத்துக்கொடுத்திருக்கிறார்.
அதன் பின் அரசியாருடனும் அவர்கள் படம் எடுத்துக்கொண்டனர். "அமெரிக்கா சென்று அதை அவர்கள் மற்றவர்களிடம் காட்டும்போது, இவர் தானே அரசி என்று ஒருவர் சொல்வார். அதை எப்படியாவது கேட்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது." என்று கூறி வாய்விட்டுச் சிரித்தாராம் அரசி (Queen Elizabeth II).
இந்த ஆண்டு அரசியார் அரியணை ஏறிய 70ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நடைபெற்றபோது அவரது பாதுகாவலர் டிக் பகிர்ந்துகொண்ட சம்பவமே இது.