தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த கிராமம்; ஒருவர் கூட வாக்களிக்கவில்லை; காரணம் இதுதான்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமமே தேர்தலை புறக்கணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் 290வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஒருவரும் வரவில்லை. அந்த கிராமத்தில் 969 வாக்காளர்கள் வசிக்கும் நிலையில் ஓட்டுப்போட ஒருவரும் வராத காரணத்தால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

இரட்டை கொலை சம்பவத்திற்கு நீதி கிடைக்கவில்லை
கடந்த மார்ச் 2ம் தேதி அந்த பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்திற்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி நாங்குநேரி கிராம நீதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
அவர்களிடம் தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஒரே ஒரு பெண் மட்டும் வாக்களிப்பதற்கக வந்தார். ஆனால் அவரை அந்த கிராம மக்கள் ஓட்டு போட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அவர்களிடம் இருந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஓட்டு போட வைத்தனர். ஓட்டு போட்டுவிட்டு அந்த பெண் வெளியே வரும்போது அவரை நாங்குநேரி கிராமத்து மக்கள் தாக்கவும் முயற்சி செய்ததாகவும் அப்பெண்ணை காப்பாற்றி போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.