பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் மட்டக்களப்பு மக்கள்!
மட்டக்களப்பில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்றைய தினம் (28-08-2023) மாலை தொடக்கம் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர்.
கடுமையான வறட்சி
இந்த கடும் வறட்சி காரணமாக விவசாயிகளும் தோட்டச்செய்கையாளர்களும் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வந்தனர்.
மேலும், உஸ்ணமான காலநிலை காரணமாக பெரியவர்களும் சிறியவர்களும் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் இன்று மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் மழைபெய்வதை காணமுடிகின்றது.
இடியுடன் கூடிய மழை
சில இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்வதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், நீண்டகாலத்தின் பின்னர் கடுமையான வறட்சியான காலநிலைக்கு மத்தியில் இன்று மழைபெய்வதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.