வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழர் பகுதி: அவதியில் மக்கள்
திருகோணமலை - மாவிலாறு குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெருகல் - மாவடிச்சேனை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள 118 குடும்பங்களைச் சேர்ந்த 327 நபர்கள் இடம்பெயர்ந்து வெருகல் - மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாவடிச்சேனை பகுதியில் உள்ள வீடுகள், வயல் நிலங்கள் பலவும் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
மாவடிச்சேனை பகுதியில் உள்ள திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை ஊடறுத்து சுமார் 2 அடியில் வெள்ளநீர் பிரவாகம் ஏற்பட்டுள்ளது.
E
இதன் காரணமாக திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதை காணமுடிந்துள்ளது.


