மகிந்தவை கைவிட்டு ரணிலுடன் இணைந்த உறுப்பினர்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார்.
தனது ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானத்தை எடுத்ததாக வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சொந்த வேட்பாளரை நியமிக்க முடிவு
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் தலைமை தனது சொந்த வேட்பாளரை நியமிக்க முடிவு செய்த போதிலும் அந்த கட்சியின் பலர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன, மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்மொழிந்துள்ளது.