பற்றியெரியும் மத்திய கிழக்கில் புலம்பெயர் தமிழர்களின் நிலை இதுவா? மனம் திறக்கும் மக்கள்
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஆரம்பித்த தாக்குதல்களால் இன்று உலகமே பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளன . இத்தாக்குதலில் ஈரான் அதிஉச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன் பல ஈரானிய உயரதிகாரிகளும் கொல்லப்பட்டதுடன் பல முக்கிய ஸ்தலங்கள் தாக்கி அழிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவதற்காக பல நாடுகளை தாக்கிவருகின்றது.

தமிழர்கள் நிலைமை
இந்நிலையில் மத்திய கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது நிலைமை குறித்து வெளிப்படுத்தியுள்ளனர்.
துபாயில் வசிக்கும் தமிழர் ஒருவர் குறிப்பிடுகையில் இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை." என்று அவர் கூறினார். நேற்று இரவு திடீரென வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் 'அவசரகால குறுஞ்செய்திகள்' வரத் தொடங்கின. அவ்வப்போது வெடிப்புச் சத்தங்கள் கேட்டாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

"கத்தாரில் சனிக்கிழமை ( பெப்ரவரி 28) முழுவதுமே வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. வீடுகள், பணியிடக் கட்டடங்களில் அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது." என்றும் வானில் ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை நாங்கள் பார்த்தாகவும் கத்தாரில் வசிக்கும் தமிழர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
"பஹ்ரைனில் உள்ள தமிழ் சங்கம் மூலமாக இங்குள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து வருகிறோம். நிலைமை மோசமடையக்கூடும் என்றே எங்களுக்கு கூறப்படுகிறது. இந்திய தூதரகமும் பஹ்ரைன் அரசும் பாதுகாப்பான புகலிடங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக பஹ்ரைனில் உள்ள தமிழர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. வெளியே வர வேண்டாமென உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்தன. எனவே நான் வெளியே செல்லவில்லை. ஊடகங்களில் புகைப்படங்கள், காணொளிகளை பகிர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள தமிழர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது வரை இருதரப்பிலிருந்தும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது,