பேருந்துகளில் ஆனசத்திற்கு மேலாக பயணிகள்; பொலிசார் நடவடிக்கை
குறுகிய தூர மற்றும் நீண்ட தூர பஸ்கள் ஆசன எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகளைக் கொண்டு செல்லப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பிக்கும் பேருந்தகளிலேயே இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.
பஸ் கட்டணத்தை 17% அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரை யாடலில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் சங்கங்களும் அதே எண்ணிக்கையிலான ஆசனங்களைப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஹட்டன் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவிக்க ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.