ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பயணி பரிதாபமாக உயிரிழப்பு! இலங்கையில் சம்பவம்
ஹட்டன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணியொருவர் கதிரையில் அமர்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். .
இந்த சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை (02-10-2023) இடம்பெற்றுள்ள்தாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில், மஸ்கெலியா, நல்லத்தண்ணி முல்லுகாமம் கீழ் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட 70 வயதான பி.எஸ். ஆறுமுகம் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரயில் வரும் வரை பயணிகள் ஓய்வெடுக்கும் கதிரையில் அமர்ந்திருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.