தலைமைச் செயலகத்தில் இருந்து முட்டை முடிச்சுக்களை கட்டும் திமுக!
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை தக்கவைத்துள்ள நிலையில், விரைவில் விஜய் தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது.
மே 7 ஆம் திகதி நேரு விளையாட்டரங்கில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி புகைப்படங்கள் அகற்றம்
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் அனைத்தும் காலி செய்யப்படுகின்றன.
அங்கிருக்கும் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் அடையாறில் உள்ள அமைச்சர்களின் இல்லங்களையும் காலி செய்யும் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிதாக பொறுப்பேற்கவுள்ள விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் விரைவில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளைப் பயன்படுத்தவுள்ளனர்.