யாழில் மதுபோதையில் வீடு புகுந்து தாக்குதல்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்று (04) நள்ளிரவு வீடு புகுந்த இருவர் மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து நள்ளிரவு குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர் மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீதும் மோசமான தாக்குதலை மேற்கொண்டதால் அவர் உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி ஓடியுள்ளார்.
மகனை அழைத்து வருமாறு கூறி மிக மோசமான தாக்குதலை வீட்டின் உடமைகள் மீது மேற்கொண்டதுடன் அருகில் உள்ள வீட்டையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பஸ்தரால் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ள மருதங்கேணி பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.