ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பேரம் பேச விரும்பும் தரப்புகள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பேரம் பேச விரும்பும் தரப்புகள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் எவையென மக்களின் கோரிக்கைகளை ஒரே கோர்வையாக தொகுத்து இணையத்தில் பதிவிட்ட இந்த கருத்து தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த பதிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை போன்ற மத்திய அரச கட்டமைப்புகளால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீள பெற்று கொடுக்க பட வேண்டும்
இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள சகல விவசாய பண்ணைகளும் விவசாய அமைப்புகளிடம் விடுவிக்கப்பட வேண்டும்
மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைகள் உட்பட ஆக்கிரமிப்பின் கீழுள்ள மேய்ச்சல் தரைகள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் வன வள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்ப்பாசன குளங்கள் பொதுமக்களிடம் கையளிக்க ப்பட வேண்டும்
பருவ காலங்களில் தென்னிலங்கை மீனவர்கள் வடக்கு கிழக்கு மீனவர்களுக்குரிய வளமிக்க கடல் பகுதியை ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது
இந்திய மீனவர்கள் ஆக்கிரமிப்பு , சட்டவிரோத கடற்தொழில் என்பவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் சீனா, இந்திய நிறுவனங்கள் வடக்கு கிழக்கின் நிலங்கள்வளங்களை முதலீடு என்கிற பெயரில் அபகரிப்பதை தடுத்து முதலீடுகள் தொடர்பான விரிவான செயல் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்
கல்முனை வடக்கு பிரதேச செயலக நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் வடக்கு கிழக்கு எங்கும் பௌத்த மத வழிபட்டு தளங்களை அத்துமீறி நிறுவுவதை தடுக்க வேண்டும்
குறுந்தூர் மலை,வெடுக்குநாறி மலை உட்பட 50 இற்கு மேற்பட்ட புராதன சைவ ஆலயங்கள் மீதான பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு கட்ட வேண்டும் வடக்கு கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பிக்குகள் மீது உடனடியாக எடுக்க வேண்டும்
இயற்கைக்கு மாறான சிங்கள சமூக குடியேற்றங்களை எக்காரணம் கொண்டும் அரச நிருவாகம் ஊக்குவிக்க கூடாது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உடனடியாக செய்யப்பட வேண்டும்
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான பட்டியலை வெளியிடுவதுடன் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை பெற்று கொடுப்பதற்கான பொறிமுறையை அவர்கள் சம்மதத்துடன் உருவாக்க பட வேண்டும்
எந்தவிதமான முன் நிபந்தனைக்ளுமின்றி பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் தனிப்பட்ட நலன்களுக்காக சிங்கள கடை நிலை அரச ஊழியர்களை வடக்கு கிழக்கு நிருவாகத்தில் நியமிக்க கூடாது.
அதாவது திறமை அடிப்படை தவிர்ந்த சூழ்நிலைகளில் அரச நிருவாகத்தை சிங்கள மயப்படுத்த அனுமதிக்க கூடாது பாடசாலைகள் மற்றும் வைத்தியலைகளை மத்திய அரச நிறுவனங்கள் கையகப்படுத்துவதை தடுப்பதோடு பாடசாலைகள் வைத்தியசாலைகளுக்குரிய வளங்கள் பாரபட்சமின்றி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்
இராணுவ சிவில் திணைக்கள கட்டுப்பாட்டின் கீழுள்ள முன்பள்ளிகள் விடுவிக்கப்பட வேண்டும் அரச ஊழியர் நியமனங்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் ஆளுகைக்குட்பட்ட சிறு அபிவிருத்தி வேலைகள் உட்பட அரச நிருவாகங்களில் ஒட்டுக்குழு அரசியல் தலையீடுகள் ஒழிக்கப்பட வேண்டும்
இவ்வாறு கையிலெடுக்க வேண்டிய பலபிரச்சனைகள் பல உள்ள போதும் எது பற்றியும் அக்கறையுமில்லாமல் 13 ஆம் திருத்தத்தில் தொங்கி கொண்டு இருக்கின்றார்கள் எவ்விதமான அருவமும் உருவமில்லாத 13 ஆம் திருத்தத்தின் கீழ் இல்லாத அதிகாரங்களை கேட்டு பேரம் பேசுவதாக சொல்லுகின்றார்கள்