கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற பங்குனி உத்தரப் பொங்கல்! (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக காணப்படுகின்ற கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம்
நேற்றையதினம் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு ஆலயங்களில் ,சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
அந்தவகையில் பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்திலும் மிகச்சிறப்பாக பங்குனி உத்தரப் பொங்கல் இடம்பெற்றது.
ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்ததுடன் தங்கள் நேர்த்திக்கடன்களையும் நாகதமிரானுக்கு செலுத்தியிருந்தனர்.
ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலங்களுள் ஒன்றாக புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயமும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/c86953ce-f698-492f-b7ed-2b94751e2b95/23-642e79cd1ea64.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a32c887d-85bb-4e1d-84a1-a1ac3f8f3820/23-642e79cda049d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/957e0826-5cc9-4c49-afca-bb73280784f7/23-642e79ce26858.webp)