பண்டோரா பேப்பர்ஸ்; மேலும் 65 இலங்கையர்களின் தகவல்கள்!
பண்டோரா பேப்பர்ஸ் மூலம் சட்டவிரோதமாக சொத்துகளை மறைத்து வைத்துள்ள இன்னும் பலர் வெளிப்படுத்தப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அந்த தகவல்களின் படி, சுமார் 65 இலங்கையர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இதுவரை கசிந்த ஆவணங்களுக்குக் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எந்தவொரு தொழிலதிபரும் எங்காவது பணத்தை வைப்பு செய்துள்ளமை குறித்து நாட்டின் ஜனாதிபதி எப்படிப் பொறுப்பேற்க முடியுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.