வேண்டுதல் நிறைவேற பஞ்சமுக தீப வழிபாடு
நாம் எந்தவொரு செயலை மேற்கொள்ளும் முன்பும் எவ்வித தடையும் இன்றி நடைப்பெற வேண்டும் என நினைத்து வழிப்படுதல் வேண்டுதல் ஆகும்.
பொதுவாக நாம் ஒரு பூஜையை செய்கிறோம் அல்லது ஒரு பரிகாரத்தை செய்கிறோம் என்றால் அதில் நிறைந்து இருப்பது தீபம் தான்.
ஒவ்வொரு பரிகாரத்திற்கும் வழிபாட்டிற்கும் ஒவ்வொரு வகையாக நாம் தீபம் ஏற்றி வழிபடுவோம்.
அதேபோல் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது.
பொதுவாக தீபம் ஏற்றும் பொழுது ஒருமுகம், இரண்டு முகம், 5 முகம் என்று பல முகங்களில் தீபத்தை ஏற்றுவோம்.
ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும்.
பஞ்சமுக தீப வழிபாடு
அதிலும் நம்மை சுற்றி இருக்கக் கூடிய பஞ்சபூதங்களுக்கு நாம் ஏற்றும் தீபம் தான் பஞ்சமுக விளக்கு தீபம்.
பொதுவாக பெரிய பெரிய நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகளில் இந்த பஞ்சமுக விளக்கை ஏற்றி வைத்திருப்பதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
பஞ்சமுக விளக்கு எரியும் இடத்தில் பஞ்சபூதங்களின் அம்சம் நிறைந்திருக்கும்.
பஞ்சபூதங்களின் அம்சம் நிறைந்திருக்கும் இடத்தில் வாஸ்து கோளாறுகளோ, தடைகளோ, தாமதங்களோ எதுவும் ஏற்படாது என்பதுதான் உண்மை.
நம்முடைய நியாயமான வேண்டுதல் நிறைவேறுவதற்காக நாம் வழிபாடு மேற்கொள்ளும் பொழுது பஞ்சமுக விளக்கை ஏற்றி வைத்து வழிபட்டால் அந்த வேண்டுதல் கண்டிப்பான முறையில் நிறைவேறும்.
துளசி சாறு
அவ்வாறு நாம் தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தில் ஐந்து சொட்டு துளசி சாறை பிழிந்து விட்டு ஏற்றினோம் என்றால் நாம் செய்யக்கூடிய அந்த செயலில் எவ்வளவு பெரிய தடைகள் ஏற்பட்டாலும் அந்த தடைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
துளசி இலை சாறு கிடைக்காத பட்சத்தில் துளசி பொடியை பஞ்சமுக தீபத்தில் சேர்த்து ஏற்றலாம்.
முடிந்த அளவிற்கு துளசி இலை சாறுகளை பயன்படுத்த வேண்டும். இந்த தீபத்தை இந்த கிழமையில் தான் ஏற்ற வேண்டும் என்று எந்தவித நிர்ப்பந்தமும் இல்லை.
நமக்கு தேவைப்படும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த தீபத்தை ஏற்றி வைத்து நம்முடைய வேண்டுதலை இந்த தீபத்திடம் கூறினாலே போதும் பஞ்சபூதங்களின் அருளை பெற்று துளசியின் அருளால் தடைகளும் நீங்கி வெற்றிகரமாக அந்த வேண்டுதல் நிறைவேறும்.