பாணந்துறையை உலுக்கிய பகீர் சம்பவம்: மலசலகூட குழியில் இருந்து மீட்கபட்ட பெண்!
பாணந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் மலசலகூட குழிக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலசலகூட குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை (29-03-2022) குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
மலசலகூட குழியில் பெண்ணின் சடலம் இருப்பதாக ஹோட்டல் உரிமையாளர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து, பாணந்துறை கீல்ஸ் வீடமைப்பு வீதியில் அமைந்துள்ள ஹோட்டலுக்குச் சென்ற பொலிஸார் மலசலகூட குழிக்குள் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
பாணந்துறை மேலதிக நீதவான் லஹிரு என் சில்வா முன்னிலையில், கழிவறை குழியின் கொங்கிறீட் மூடியைத் திறந்து சடலம் மீட்கப்பட்டது.
கடந்த 25ஆம் திகதி நள்ளிரவு கடவத்தை பகுதியில் உள்ள கிளப் ஒன்றிற்கு ஹோட்டல் முகாமையாளர் உட்பட பலர் சென்று யுவதியை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் தெரியவருகையில்,
ஹோட்டலின் மேல் தளத்தில் உள்ள அறை எண் 605 இல் யுவதி தடுத்து வைக்கப்பட்டார். ஹொட்டலின் முகாமையாளர், இரண்டு ஊழியர்கள் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அவர்கள் யுவதியை கொலைசெய்து புதைத்திருக்கலாமென நம்பப்படுகிறது. விடுதியின் பதிவு ஆவணத்தின் படி யுவதி 26 வயதுடைய பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடவத்தையிலுள்ள இரவு விடுதியொன்றில் பணிபுரிந்து வருகிறார். யுவதியின் சடலத்துடன், கைக்கடிகாரம், கையடக்கத் தொலைபேசி சார்ஜர், கூரிய கத்தி, ஒரு சோடி காலணிகள், ஆணுறைகள், துண்டு, விரிப்பு மற்றும் பல துணி துண்டுகளும் கழிவறை குழியில் காணப்பட்டன.
ஹோட்டலின் முகாமையாளரும் இரண்டு ஹோட்டல் ஊழியர்களும் நேற்று திங்கட்கிழமை (28-03-2022) காலை ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், தற்போது இரண்டு ஊழியர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 40 மற்றும் 45 வயதுடைய பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்