பாலித தெவரப்பெருமவின் மனைவி காலமானார்
களுத்துறை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான மறைந்த பாலித தெவரப்பெருமவின் மனைவி நேற்று(25) காலமாகியுள்ளார். முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதி ஆவார்.
முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அகால மரணமடைந்த பின்னர் அவரது மனைவி ஷெரீன் தெவரப்பெரும, களுத்துறை பிரதேச சமூக சேவை விடங்களில் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இன்னிலையில் பாலித தெவரபெரும மனைவி மறைவுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அவரது இல்லத்துக்கு சென்றுள்ளனர்.
அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (27) மதுகமவில் உள்ள பந்திய தகன மேடையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.