லண்டன் மருத்துவமனை அலட்சியத்தால் 19 வயது இலங்கை தமிழ் யுவதி உயிரிழப்பு!
லண்டனில் உள்ள பெத்லெம் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது சோவியா ராஜரத்தினம் என்ற இலங்கை தமிழ் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 9, 2021 அன்று இந்த சம்பவத்தில் , உரிய நேரத்தில் அவரை உயர் பாதுகாப்பு மறுவாழ்வுப் பிரிவுக்கு மாற்றியிருந்தால் இந்த மரணத்தைத் தடுத்திருக்கலாம் என தற்போது நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த இளம்பெண்
மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது இறப்பிற்கு முன்னதாகவே பாதுகாப்பான மறுவாழ்வுப் பிரிவில் அனுமதிக்கப்படாமல் போனது ஒரு "தவறவிடப்பட்ட வாய்ப்பு" என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
தன்னைப் பராமரிப்பவர்களிடமிருந்து தப்பிச் தப்பிச் சென்ற மறுநாளே அதாவது செப்டம்பர் 9, 2021 அன்று அவர் துரதிர்ஷ்டவசமாக இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இன்னிலையில் பாதுகாப்பான மறுவாழ்வுப் பிரிவில் அவரை அனுமதிப்பது "அதிக செலவு பிடிக்கும்" என்று 'சவுத் லண்டன் அண்ட் மாட்ஸ்லி' (SLAM) NHS அறக்கட்டளை கருதியதாக சோவியா ராஜரத்தினத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மனநலச் சட்டத்தின் கீழ் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மிஸ் ராஜரத்தினம், பாதுகாவலருடன் வெளியே செல்லும் அனுமதியைப் (escorted leave) பெற்றிருந்தபோது அங்கிருந்து தப்பிச் சென்று, உயிரிழந்தார்.
தடயவியல் மனநல மருத்துவ நிபுணரான டாக்டர் சோஹோம் தாஸ், அந்த இளம்பெண்ணின் இறப்பு குறித்த விசாரணையின்போது, அவர் இறப்பதற்கு "முக்கியக் காரணமாக அமைந்த" ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டதாகத் தெரிவித்தார்