கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து 21 வயது இளைஞனின் சடலம் மீட்பு
ஹொரவ்பொத்தானை, இஹலகும்புக்ககொல்லாவ பகுதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து 21 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கடந்த 24 ஆம் திகதி தனது சகோதரியுடன் இணைந்து மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.
எனினும் அங்கு சகோதரியிடம் விறகுகளைக் கொடுத்துவிட்டு, தாம் பின்னர் வருவதாகக் கூறி அவ்விடத்திலிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பாததால், பிரதேச மக்களும், உறவினர்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது, இந்தக் கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது சடலத்தின் மீது காயம் ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஹாரவ்பொத்தானைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.