சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியிடம் தோற்ற இலங்கை அணி
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இன்று (7) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

போட்டியில் இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்ஷா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 129 என்ற வெற்றியிலக்கு பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 129 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஹிப்சதா பர்ஹான் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.