பயணிகளின் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான் ராணுவம்
சர்வதேச பயணிகள் விமானங்களை, கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது,'' என்று இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறினார்.
கராச்சி, லாகூர் நகரங்களின் மீது பயணிகள் விமானம் தொடர்ந்து பயணிக்கிறது. பயணிகளின் விமானங்களைத்தான் பாகிஸ்தான் இராணுவம் கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறது.
வான் எல்லையை மூடாமல், மக்களின் உயிரைப் பணயம் வைத்திருக்கிறது பாகிஸ்தான் என்று விங் கொமாண்டர் வியோமிகா சிங் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தியா 4 ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் ரேடார்களைத் தாக்கியது. அதில் ஒன்று சேதமடைந்தது.
பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது என்றும் வியோமிகா சிங் கூறினார்.
அதிகளவு டுரோன்களை அனுப்பி இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உளவு தகவல்களை பெற பாகிஸ்தான் முயற்சித்தது.
பாக்., அனுப்பிய டுரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. பஞ்சாபின் பதிண்டாவிலும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. இதுவும் முறியடிக்கப்பட்டது.