சோற்றுப் பார்சலில் சிக்கிய ஹெரோயின் பொதிகள்!
பால் சோற்றுப் பார்சலில் 29 ஹெரோயின் பொதிகளை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற ஒருவரே இவ்வாரு சோற்றுபார்சலில் ஹெரோயின் பொதிகளை மறைத்து எடுத்துச்சென்றுள்ளர்.
சம்பவத்தில் பாணந்துறை வெகட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பார்வையாளர்களை பரிசோதித்துக் கொண்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பால் சோற்றுப் பார்சலில் காணப்பட்ட பால் பாக்கெற்றை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அதனை சோதனை செய்தபோது அதற்குள் 138 மில்லி கிராம் நிறை கொண்ட 29 பக்கற்களில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.