அதிபருக்கு இரண்டு வீடு;பிரதமர் ஹரிணி பெயரால் மோசடி; போலி கணவன் கைது

Colombo Prime minister Crime Harini Amarasuriya Sri Lankan Schools
By Sulokshi Apr 22, 2026 10:41 AM GMT
Report

   பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தனிப்பட்ட செயலாளரின் கணவர் எனத் தன்னைக் காட்டிக்கொண்டு, கொழும்பு - பொரள்ளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை , கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று (21) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் பொரள்ளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபருக்கு இரண்டு வீடு;பிரதமர் ஹரிணி பெயரால் மோசடி; போலி கணவன் கைது | P M Harini Amarasuriya Secretary Fake Husband

அதிபருக்கு இரண்டு வீடு

சந்தேக நபர் தன்னை இலங்கை விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ (Wing Commander) எனப் பொய் கூறி பாடசாலை அதிபரை அணுகியுள்ளார்.

கடந்த சுதந்திரத் தின விழாவின்போது தான் வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்ததாகவும் கூறி அதிபரின் நம்பிக்கையை வெல்ல முயற்சி செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணை காண்பித்து எரிபொருள் பெற முயற்சி; வழங்க மறுத்த ஊழியரின் கன்னத்தை பதம் பார்த்த நபர்!

பெண்ணை காண்பித்து எரிபொருள் பெற முயற்சி; வழங்க மறுத்த ஊழியரின் கன்னத்தை பதம் பார்த்த நபர்!

அத்துடன், விமானப்படை அதிகாரிகள் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றும் தனது மனைவி எனக் கூறி, ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கி அவற்றை அதிபரிடம் காண்பித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) வீடுகள் தேவைப்படுபவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக ஐந்து வீடுகள் தனது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு வீடுகளை அதிபருக்குப் பெற்றுத் தருவதாகவும் கூறி அதற்கான விண்ணப்பப் படிவங்களையும் சந்தேக நபர் அதிபரிடம் வழங்கியுள்ளார்.

இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கிய அபாயகரமான நெகிழி மணிகள்

இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கிய அபாயகரமான நெகிழி மணிகள்

குறித்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் பாடசாலை அதிபர் இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில், அத்தகைய பெயரில் தனிப்பட்ட செயலாளர் எவரும் அங்கு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு தெற்குப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷான் சூரியபண்டாரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இதற்கு முன்னரும் போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானவர் என்பதும், அவர் மீது சுமார் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கொழும்பு தெற்குப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷான் சூரியபண்டாரவின் ஆலோசனையின் பேரில், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் பிரியந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US