1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகம்

Hambantota Sri Lanka Sri Lankan Peoples vehicle imports sri lanka
By Vironika Oct 16, 2026 10:21 AM GMT
Report

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியிலும், நடப்பு (2026) ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 30,809 புதிய வாகனங்கள் மற்றும் 55,580 பயன்படுத்தப்பட்ட (Used) வாகனங்கள் அடங்கலாக மொத்தம் 86,389 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகம் | Over 167 000 Vehicles Shipped Via Hambantota Port

 வாகன இறக்குமதி

அத்துடன், 2026ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் மேலும் 81,180 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 25,018 புதிய வாகனங்களும் 56,162 பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் அடங்குகின்றன.

வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருந்த போதிலும், போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இறக்குமதியாளர்களுக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்ததாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் உடனடிச் செயற்பாடுகள், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் நடைமுறைச் சாதகமான ஆதரவு ஆகியவற்றை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) பாராட்டியுள்ளது.

சவூதி அரேபியாவிற்கான விமான சேவைகள் தொடர்ந்து இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவிற்கான விமான சேவைகள் தொடர்ந்து இடைநிறுத்தம்

450க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இச்சங்கத்தில் பெருநிறுவனங்கள் மட்டுமன்றி நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வாகன இறக்குமதி வர்த்தகர்களும் அடங்குகின்றனர்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த காலத்தில், நீண்டகாலமாகத் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கான தாமதக் கட்டணங்களைத் (Demurrage charges) தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கவும் துறைமுக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இளம் பெண்ணின் வாழ்வை பறித்த வாகனங்கள் ; பொலிஸாரின் பிடியில் இருவர்

இளம் பெண்ணின் வாழ்வை பறித்த வாகனங்கள் ; பொலிஸாரின் பிடியில் இருவர்

வாகனங்களை விடுவிப்பதை இலகுபடுத்துவதற்கும், இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் நிதிப் பாதிப்பைக் குறைப்பதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் வளைகுடா பிராந்தியம் (Gulf region) ஊடான வாகன மறு ஏற்றுமதிச் (Transshipment) செயல்பாடுகளில் ஏற்பட்ட தடங்கல்களால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கான சேமிப்புக் கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் (Storage fee caps) சிறப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு; தகுந்த முடிவை ஜனாதிபதி அநுர எடுப்பார்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு; தகுந்த முடிவை ஜனாதிபதி அநுர எடுப்பார்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US