சுற்றிவளைப்பில் சிக்கிய 1,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா ; இருவர் கைது
ஹம்பகமுவ பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரும், கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட மற்றோரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சனிக்கிழமை (22) ஹம்பகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமகல பகுதியில் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை
இதன்போது, 1,044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சாவுடன் ஒரு சந்தேகநபரும், 54,096 கஞ்சாச் செடிகளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு ஹம்பகமுவ பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதம்பலாவ பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.