பூஜை அறையில் நண்பனின் தலை ; பிரிந்த மனைவியுடன் சேர கணவன் செய்த கொடூரம்
பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா என்கிற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் கார்செல்(45). சில நாட்கள் முதல் இவரை காணவில்லை.

தீவிர விசாரணை
இந்நிலையில் அவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் விசாரணை செய்தனர்.
விசாரணையில் கடைசியாக சந்தோஷ் தனது நண்பருடன் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
எனவே நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சந்தோஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தலை எங்கே என்று கேட்டபோது தனது வீட்டின் பூஜை அறையில் இருப்பதாக அவர் கூறினார். அதன்பின் அவரிடம் தீவிர விசாரணை நடத்தபோதுதான் உண்மை தெரியவந்தது.
3வருடங்களுக்கு முன்பு தனது மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் மீண்டும் சேரவேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என ஒரு சாமியார் கூறினார்.
எனவேதான் எனது நண்பன் சந்தோஷை கொலை செய்து அவனுடைய தலையை பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.. உடலை குளத்தில் வீசி விட்டேன்’ என வாக்குமூலம் கொடுத்தார்.
அவரின் வீட்டில் இருந்த பூஜை அறையில் புதைக்கப்பட்டிருந்த சந்தோஷின் தலையை பொலிசார் தோண்டி எடுத்தனர்.