அமைச்சர் அமித் சாவின் அதிரடி உத்தரவு! கொழும்பில் இருந்து அவசரமாக டெல்லி பறந்த தூதுவர்
வெளியான தகவல்
இந்திய பிரதமருக்காக இன்று கைளிக்கப்படவிருந்த ஆவணம் பிரிதொரு தினத்தில் கையளிக்கப்படும் என தமிழ் பேசும் கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இந்த ஆவணம் கையளிக்கப் படுவதாக இருந்தபோதிலும் இந்திய உயர்ஸ்தானிகர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிக்க தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி இக்கடிதம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த தமிழர் தரப்பின் கடித விவகாரத்தை மத்தியரசு ஒரு பெருட்டாக கருத வில்லை எனவும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் குறித்த விடயம் கையாளப்பட்டதாகவும் அதனை நீண்ட நாட்களாக அவதானித்த மத்தியரசு இக் கடித விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் அமித் சாவின் நேரடிக் கண்காணிப்பில் பல கட்ட ஆய்வு செய்யப் பட்ட பின்னர் குறித்த கடிதத்தை பெறுவதைக் கைவிட்டு உடன் டெல்லி அழைத்ததாக டெல்லியின் மூத்த ராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.