கையும் களவுமாக பிடிபட்ட குருநாகல் மாநகர சபை பிரதி மேயர் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் , 30 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டபோது கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
குருநாகல் பஸ் நிலைய பராமரிப்பு மற்றும் பொது மலசலக்கூடங்களைத் துப்பரவு செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவே அவர் இந்த பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி செலுத்தும் குருநாகல் மாநகர சபையின் பிரதி நகரமுதல்வராக பணியாற்றும் இவர், நேற்று வெள்ளிக்கிழமை (8) பத்தரமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.