களனி பல்கலைகழக விவகாரம்; நீதிமன்றம் வைத்திய மாணவர்களுக்கு வழங்கிய உத்தரவு
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த சந்தேகநபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட ஆறு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
பல்கலைகழக விவகாரம்; இராஜாங்க அமைச்சரின் மகன் உட்பட அறுவர் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு !