பல்கலைகழக விவகாரம்; இராஜாங்க அமைச்சரின் மகன் உட்பட அறுவர் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு !
களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 6 சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சரின் மகன் இன்று அடையாள அணிவகுப்பில் முன்னிலைப் படுத்தப்பட்டிருந்தார்.
களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தாக்குதல் சம்பவத்துக்கு பயன்படுத் தப்பட்ட வாகனம் ஒன்று களுபோவில பிரதேசத்தில் வைத்து ராகம பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்
அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.