கணினி குற்றங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கணினி குற்ற வலைப்பின்னல் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் குழுவொன்றை மீண்டும் விளக்கமறியலில் வைக்க காலி பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் உத்தரவு
இதன்போது, காலி துறைமுக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையிலும், தொடந்துவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 55 சந்தேகநபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் காலி பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஏனைய சந்தேகநபர்களை தனிப்பட்ட பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடந்துவ பிரதேசத்தில் 55 பேரும், காலி பொலிஸ் பிரிவில் 110 பேரும், காலி துறைமுக பொலிஸ் பிரிவில் 23 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழக முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோசியருக்கு உயர் அரசுப்பதவி ; அதிரடிகளுக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை
பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
காலி மற்றும் காலி துறைமுக பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி பிரதான நீதவான் சமீர தொடங்கொட முன்னிலையிலும், ஹிக்கடுவ - தொடந்துவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காலி மேலதிக நீதவான் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.