காலி மாநகர சபையில் கூச்சல் குழப்பம்; 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது
காலி மாநகர சபையின் (1 SJB, 3 UNP, 1 SLPP) ஒரு பெண் உட்பட ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளை மிரட்டியதற்காகவும், கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளானர்.

நேற்றையதினம் காலி மாநகர சபையில் நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.
சபை நடவடிக்கைகளை மாநகர மேயர் ஆரம்பித்தவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் சபையில் அமைதியற்ற சூழல் உருவானது. இதன்போது, "திருடன் திருடன், எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்" என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்