நல்லூர் சிவன் கோவிலில் திருவெம்பாவை புட்டு திருவிழா; பக்தியுடன் கலந்துகொண்ட பக்தர்கள்!
யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் கோவிலில் திருவெம்பாவை திருவிழாவை முன்னிட்டு புட்டு திருவிழா நேற்றைய தினம் (30) மிக சிறப்பாக நடைபெற்ற நிலையில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தன்னை நாடிகய் பக்தையில் பக்தியை மெச்சி சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்து வைகையின் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

புராண வரலாற்று கதை
அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த புட்டு திருவிழா திருவெம்பாவை திருவிழாவின் போது நடைபெற்று வருகின்றது.
வைகை ஆற்று வெள்ளத்தைத் தடுக்க பாண்டிய மன்னன் மக்களுக்கு மண் சுமக்க கட்டளையிட்டான். இதன்போது அங்கு வாழ்ந்த வந்தி என்ற மூதாட்டி , முதுமை காரணமாக மண சுமக்க தன்னால் முடியவில்லை என சிவபெருமானை பிரார்த்தனை செய்தார்.

அந்த மூதாட்டிக்கு உதவுவதற்காக , சிவபெருமான் கூலியாள் போல வேடமிட்டு மதுரைக்கு வந்து, மண சுமந்தார்.
அதற்கு கூலியாக மூதாட்டியிடம் பிட்டு வாங்கியதோடு , மூதாட்டியின் பக்தியை மெச்ச, வைகை ஆற்று வெள்ளத்தைத் தடுக்க, பாண்டிய மன்னன் ஏவிய பணியில் தானும் மண் சுமந்தார்.

இதுவே எம்பிரான் பிட்டுக்கு மண் சுமந்த கைதையாகும். இக்கதையானது திருவிளையாடற்புராணம்-ல் வரும் புகழ்பெற்ற 'மண் சுமந்த படலம்' என்று அழைக்கப்படுகிறது.

