ஜனாதிபதி ரணிலை திட்டித் தீர்த்த எதிர்க்கட்சித் தலைவர்! (Video)
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம்தாச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வன்மையாக சாடியுள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாச கூறுகையில், நாட்டிலே என்ன நடந்தாலும் ஐ.எம்.எப் இன் பரிந்துரை என்று கூறுகிறார்கள்.
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு,எரிபொருள்,அத்தியவாசிய பொருட்களின் விலை அதிகரிப்பு இவை எல்லாவற்றுக்கும் ஐ.எம்.எப் காரணமா ரணில் அரசு இரவோடு இரவாக ஒப்பந்தங்களைச் செய்கிறது.
மொட்டின் கலாசாரத்தை இங்கு ரணில் பரப்புகின்றார்.வரி வரி என மக்களை சாகடிக்கிறார்கள். சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையை தனியாருக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டை வங்குரோத்து அடையச் செய்து விட்டு இப்போது ரணில் அரசு,அரச செலவில் சுற்றுலா செல்கிறது. மக்களை கடன் சுமையில் தள்ளிவிட்டு ஐ.எம்.எப் இன் பரிந்துரை என்று சொல்கின்றனர் என்றும் சாடினார்.
நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்...